தேனி:இந்தியக் குடியரசாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில். குழந்தைப் பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆறு வயது சிறுவனின் யு. ஆர். எஃப் ஆசிய சாதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
கே. நவீனாவின் மகன் என்.திரினேஷ் (வயது 6).
7500 மீ. இடைவிடாமல் நீந்தி பதிவு செய்துள்ளார்.
20 ஜூலை 2024 - காலை 8 மணிக்கு தேனி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் என். சுகுமார் கொடியசைத்து துவக்கிவைத்தார். யு. ஆர். எப் தலைவர் கின்னஸ் சுனில் ஜோசப் மற்றும் பிரதிநிதி எம். அனிஷ் ஆகியோர் பார்வையாளர்களாக இருந்தனர்.
ஏழரை கிலோமீட்டர் தூரத்தை மூன்று மணி நேரம் 15 நிமிடம் 51 வினாடிகளில் கடந்தார் திரினேஷ் ஸ்ரீ ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர் ஜி.விஜயராணி சான்றிதழ் வழங்கினார்.
டாக்டர். மு. விஜயகுமார் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எம்.கே.எம். முத்துராம லிங்கம், ஏ.முருகன் தென் மண்டலச் செயலர், தமிழ்நாடு கூட்டமைப்பு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம்.
தேனி மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments